ஐரோப்பிய ஒன்றியத்திலேயே முதல் நாடாக கிரீன்லாந்தில் பிரான்ஸ் எடுத்த நடவடிக்கை
கிரீன்லாந்தின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட டேனிஷ் பிரதேசமான நூக்-கில், பிரான்ஸ் தனது புதிய தூதரகத்தை வெள்ளிக்கிழமை (பிப். 6, 2026) அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கிரீன்லாந்தில் தூதரகப் பணியைத் தொடங்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.
ஜீன்-நோயல் போரியர் கிரீன்லாந்திற்கான பிரான்ஸின் முதல் கன்சல் ஜெனரலாகப் பொறுப்பேற்றுள்ளார்; இவர் இதற்கு முன்பு வியட்நாமுக்கான பிரான்ஸ் தூதராகப் பணியாற்றியவர்.
கிரீன்லாந்தைக் கையகப்படுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் இறையாண்மைக்கு ஆதரவளிக்கும் விதமாக பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதோடு, கிரீன்லாந்தின் கனிம வளங்கள் குறித்த ஆய்வில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதும் இந்தத் தூதரகத்தின் முக்கிய நோக்கமாகும்.

