மியான்மரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை

மியான்மரில் அண்மையில் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளின் செலுத்துனர்கள் இருவருக்கு மியான்மர் நீதிமன்றத்தினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட ஏனைய 13 மீனவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பொது மன்னிப்பின் கீழ் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மர் கடல் எல்லையை கடந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இலங்கை மீனவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் ரயன்புத்தா மற்றும் லோரன்ஸ் ஆகிய இரண்டு மீன்பிடி படகுகளில் புறப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி மியான்மர் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை எந்தவித வழக்கும் இன்றி விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியான்மருக்கான இலங்கை தூதுவர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin