உள்ளாடையில் வெடிப்பொருட்கள் – பெண் கைது

உள்ளாடையில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த பெண்ணொருவரை கொட்டவெஹர பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டவெஹர பலுகஸ் சந்தியில் வீதித் தடைகளைப் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கொட்டவெஹர, பலுகஸ் சந்தி பகுதியில்... Read more »

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் இடையே சந்திப்பு

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (20) இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும்... Read more »
Ad Widget

கனடாவில் குடியேற உள்ளோருக்கு சிக்கல்… வெளியான தகவல்!

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புலம்பெயர்வோரை வரவேற்கும் அரசாங்கம் தேவைக்கேற்ப வீடுகளைக் நிர்மாணிக்க வேண்டாமா? என எதிர்க்கட்சிகள்... Read more »

இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தை குட்டி ஒன்று மீட்பு. நேற்று சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் பணியாற்றி... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள்

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த உத்தரவை சுற்று நிருபம் மூலம் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும்... Read more »

சீ.ஐ.டி பணிப்பாளரின் கீழ் மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் மேலும் இரண்டு பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது இதுவரை காலமும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது. இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான... Read more »

பிரான்ஸில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட குழந்தை மீட்பு

பிரான்ஸ் வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு மாதக் குழந்தை தமது தாயுடன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் வடகிழக்கே புறநகர் பகுதியில் பொதுமக்களினால் தாயும் சேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தாய் குழந்தையுடன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரச... Read more »

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார்? நாளை முடிவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு இம்மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழரசு கட்சியின்... Read more »

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அஞ்ச மாட்டோம்: பணிகள் தொடரும்

அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் கொழும்பு நெலும்... Read more »

சூடுபிடிக்கும் தமிழரசு கட்சியின் தலைமைப் பதவி தேர்தல்: சிறிதரன் எம்.பி விசேட அறிக்கை

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், தலைமைப் பதவிக்கு போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டால் ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும்... Read more »