பிரான்ஸ் வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு மாதக் குழந்தை தமது தாயுடன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் வடகிழக்கே புறநகர் பகுதியில் பொதுமக்களினால் தாயும் சேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த தாய் குழந்தையுடன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணி ஜீன்-பாப்டிஸ்ட் பிளேடியர் தெரிவித்துள்ளார்.
வீடற்ற நிலையில் வாழ்ந்துவந்த 21 வயதான குறித்த பெண் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பாரிஸிக்கு கிழக்கே உள்ள ஒரு வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தொடர்ந்து போக்கிடம் இன்றி இருந்த குறித்த பெண்ணும் குழந்தையும் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலே, குழந்தையும் தாயும் கடந்த 18 ஆம் திகதி காணாமல் போனதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.