இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இந்த உத்தரவை சுற்று நிருபம் மூலம் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார்.
அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் அரச நிறுவனங்களின் கட்டிடங்களை மின்சாரத்தால் அலங்கரிக்குமாறு பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, மின் விளக்குகளை சரியான முறையில் எரியச் செய்ய வேண்டும் என்றும், அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்றும் சுற்றுநிருபத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
மேலும் சுதந்திர தின விழாவையொட்டி பிப்ரவரி 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.