சீர்குலையும் யாழ் குடாநாடு!

யாழ். குடாநாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகளவான வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் நிலையப் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இவை இன்னும் அதிகரித்துள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை,... Read more »

யாழில் கோயில் பூசகர் ஒருவரின் தில்லுமுல்லால் அவரை வெளியேற்றிய ஆலய நிர்வாகத்தினர்

வீட்டுக் கிருத்தியத்தில் படைக்கப்பட்ட பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவில் பூசையில் பயன்படுத்திய பூசகர் ஆலய நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் தென்மராட்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பூசகர் அவசர அவசரமாக கோவிலுக்குள் நுழைந்து பொங்கல், வடை, மோதகம்... Read more »
Ad Widget

யாழில் ஒருவருக்கு ஒருவர் கத்தியால் வெட்டிக் கொண்ட கணவன் மனைவி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான... Read more »

யாழில் போதைப்பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட வைத்தியர்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயிர்கொல்லி போதைமருந்து பாவனை அதிகரித்துள்ள நிலையில், மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பிரதான மருந்தகங்களிலிருந்து அதிகளவான உயிர்கொல்லி போதை மாத்திரைகளை இரண்டு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. உயிர்கொல்லி போதை... Read more »

வீதியால் தனிமையில் சென்ற மூதாட்டியிடம் வழிப்பறி!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளை சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியால்... Read more »

யாழ் மாதகல் பகுதியில் 60 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம்-மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. படகொன்றும் மீட்பு இதன்போது கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும்... Read more »

யாழில் ஒரே நாளில் போதைக்கு அடிமையான 22 இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக போதைப்போருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது... Read more »

யாழில் மாணவியின் தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற இராணுவ உத்தியோகத்தர்

யாழ்ப்பாணம் பலாலி – வள்ளுவர்புரத்தில் வீதியில் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். வழிப்பறிக் கொள்ளை இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 15 வயது மாணவி... Read more »

யாழில் பேருந்தில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று(22.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அச்சுவேலி, நீர்வேலி,... Read more »

யாழில் வீதியால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றியது!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது (21-10-2022)... Read more »