வட மாகாண ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு!

வடக்கு மாகாணத்தில் யாழில் மாத்திரம் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில்... Read more »

அடையாள அட்டைகளுக்கான புகைப்பட்ட கட்டணம் அதிகரிப்பு!

அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலுக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் புகைப்பட நகல் எடுப்பதற்கு பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் வசூலிக்கப்பட வேண்டிய அதிகபட்ச கட்டணம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக... Read more »
Ad Widget

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் வடக்கு – கிழக்கு மாகாணம் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியாகும். குறித்த காற்று சுழற்சியானது, மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைந்ததால் நாட்டில் இந்த நிலையில் உருவாகியுள்ளதாக... Read more »

திருமணத்திற்கு தயாரான இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

காலி – மாத்தறை பிரதான வீதியில் கொக்கல சிங்கதீவர கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிதிகம அஹங்கம பகுதியைச் சேர்ந்த நிரோஷ் அசேல ரங்ககுமார என்ற 29 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரின் திருமணத்தை பதிவு செய்வதற்கான சாட்சி கையொப்பமிட்டுவிட்டு,... Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

நாடளாவிய ரீதியில் பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும் எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய பாடசாலை... Read more »

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி!

தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் வாழ்த்து நேற்று(18) காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர்... Read more »

மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக

மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக... Read more »

2024 இல் ஒரு குடும்பம் ஜீவிக்க ஒரு லட்சத்து 75 ஆயிரம் தேவை

நாடு மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவு... Read more »

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளவர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (18) இந்த போராட்டம் இடம்பெற்றது. “பட்டதாரி பாடசாலை அபிவிருத்தி... Read more »

அமெரிக்க புறப்பட்ட பசில் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். பசில் ராஜபக்ச அமெரிக்காவில் சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டின் போது அந்த கட்சியின்... Read more »