நாடளாவிய ரீதியில் பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும் எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் எச்சரிக்கை
இதேவேளை, இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வாய்ப் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.