நாடு மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவு காரணமாக மக்களும்,சமூகமும் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வரி வருவாயை அதிகரிக்கவில்லை என்றால்,சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு வேலைத்திட்டம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது நாம் பயங்கரமான இடத்தில் இருக்கின்றோம்.நான் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தியது போல் தற்போது சமநிலையாக இருக்கின்றோம்.
எனினும் இந்த நிலைமையானது வரிசை யுகம் இருந்த காலத்திற்கு முன்பு இருந்தயுகத்தை விட மிகவும் மாற்றமான இடத்தில் உள்ளது.
நெருக்கடி முன்னர் வரிசைகள் ஏற்பட்ட காலத்தில் வாழ்வதற்கு 75 ஆயிரம்முதல் 80 ஆயிரம் ரூபா வரை தேவைப்பட்டது.
இன்று ஒரு குடும்பம் ஜீவிக்க ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது என அரசாங்கத்தின் புள்ளிவிபர நிறுவனங்கள் கூறுகின்றன.
இதன் மூலம் மக்களுக்கு வாழ முடியாத நிலைமையேற்பட்டுள்ளதை காணமுடிகிறது.
வரிசையில் இருந்து கூட பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், வரிசைகள் இல்லாமல் போய்விட்டது என்று நாம் மகிழ்ச்சியடைய முடியாது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.