ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை இவ்வருட நடுப்பகுதியில் நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த... Read more »
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை சீனா வழங்கும் என பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இலங்கைக்கு முதல் உதவியாளராக இந்தியா கைகொடுத்ததுடன், சீனாவும் பல்வேறு வழிகளில் உதவியளித்திருந்தது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான... Read more »
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் மூலம் இடம்பெறும் மோசடிகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள்,பெண்களுக்கு எதிரான வன்முறைச்... Read more »
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர் திரு.அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்தியாவில் இருந்து... Read more »
ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்களைச் சுற்றி 10,000 க்கும் மேற்பட்ட படையின் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ”ஈஸ்டர் ஞாயிறு தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 6,837... Read more »
சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக... Read more »
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் சந்தித்து தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. என்றாலும், எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும்,... Read more »
நாடெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவே முடியாது. அதனைச் செய்வதாயின் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். அதற்கு உயர்நீதிமன்றத்தின்... Read more »
சீனாவினால் 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த கடன் தவணைக்கு கொடுப்பனவு நிவாரணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் சீன அரசாங்கம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது. இதன்படி, கடன்... Read more »
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை... Read more »

