இலங்கையில் தலைமறைவாகிய பிரித்தானிய பெண்!

நீதிமன்றத்தினால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசரை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய பெண்ணின் மனு நிராகரிப்பு தம்மை இலங்கையில்... Read more »

அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை குறைக்க திட்டமிட்டுள்ள ஜனாதிபதி!

அரச துறையின் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பொது அரச ஊழியர்களின் ஓய்வு வயதை அறுபது வயதாக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவாக ஓய்வுபெறும் வயது திருத்தத்தை உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக உயர் அதிகாரி... Read more »
Ad Widget

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில், இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று வியாழக்கிழமை (18-08-2022) 1 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின் துண்டிப்பு... Read more »

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பெருந்தொகையான மக்கள் பாதிப்பு!

இலங்கையின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுகாதாரம், கல்வி மற்றும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான அவர்களின் உரிமைகளை பாதிக்கிறது.... Read more »

கோட்டபாய இலங்கை வரும் திகதியை வெளியிட்ட தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழங்கு விசாரணைக்காக இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்... Read more »

சீன கப்பல் விவகாரத்தில் இந்திய பிரமுகர் வெளியிட்டுள்ள கருத்து!

சீன கப்பல் விவகாரத்தை பெரிதுபடுத்தக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இரண்டு விடயங்களை செய்ய பழகவேண்டும், ஒன்று இலங்கைக்கு இந்தியாவுடன் எந்த பாதுகாப்பு – இராணுவ கூட்டணியும் இல்லை, மற்றொன்று நாங்கள் இலங்கையுடன்... Read more »

மானிய விலையில் யூரியா வழங்க திட்டம்!

விவசாய அமைச்சினால் யூரியா விநியோக திட்டம் முழு தணிக்கை செய்யப்படுகிறது. உர விநியோகத்தின் குறைபாடுகளை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கணக்காய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யூரியா விநியோகத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து அமைச்சுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அமரவீரவின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.... Read more »

தொடர் கணினி வளையாட்டால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

கணினி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் மனோரீதியாக பாதிப்புற்ற 16 வயது பள்ளி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கம்பளை, எரகொல்ல லென்டன்ஹில் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன் மாலிங்க விஜேரட்ண என்ற மாணவனே தனது... Read more »

இரகசியமான முறையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்த நபர் கைது!

கோழி இறைச்சி விற்பனை செய்யும் போர்வையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமான முறையில் மாட்டிறைச்சி மற்றும் மரை இறைச்சியை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இமதுவ நகரில் பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் கோழி இறைச்சியை விற்பனை... Read more »

அபுதாபி லொத்தர் சீட்டில் இலங்கை பெண்ணுக்கு அடித்த யோகம்!

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதியாகக் காலத்தைக் கழித்த பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் ரூபா பரிசாக வென்றுள்ளார். லொத்தர் சீட்டில் வெற்றி தமிழ்நாட்டில்... Read more »