புஸ்ஸல்லாவ தேயிலைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் கணனி பொறியியலாளரான பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மிரிஹான தலைமையக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எல்பொட... Read more »
கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர் உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண் பக்தர்... Read more »
வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணை 4 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவரையே இவ்வாறு துஷ்ப்பிரியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 வயது... Read more »
இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக மோரகஹவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோத்தபொல, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜபக்ச நிவங்க ரொமேஷ் என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் காதலியைச் சந்திக்க இருசக்கர... Read more »
ஜனவரி 18 முதல் காணாமல் போன 28 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர். மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண் இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தொடர்பில் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை மாவனல்லை... Read more »
எதிர்காலத்தில் அரச ச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார் மேலும் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு... Read more »
உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி நாளைய தினம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைகுழுக்கள் தெரிவித்துள்ளது. அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால்,... Read more »
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும்... Read more »
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக இவ்வாறு பொருட்களின் விலை குறையக் கூடும்... Read more »
மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கட்டுவன் புலம் பகுதியில் இன்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞன் 18 வயதுடைய தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த எஸ் மாதுசன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

