CCD முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2... Read more »

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. அத்துடன் தற்போது பல்வேறு அபிவிருத்தி... Read more »
Ad Widget

தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!

மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... Read more »

குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிக் கொலை!

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த நபருக்கும் அவரது மனைவின் சகோதரனுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து... Read more »

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் : சிறுபான்மையினர் யாருமில்லை !

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுப்பினர்களை நியமித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைத்தார். இதன்படி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்... Read more »

உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் – அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!

பாடசாலை மாணவர்களுக்கான தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகளைக் கொள்வனவு செய்யும் போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாடசாலை தவணை ஆரம்பத்தை இலக்காகக் கொண்டு தரமற்ற தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுவதைக்... Read more »

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு : 01Kg இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளது பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை... Read more »

தேன் என்று சீனிப்பாணி விற்ற மூவர் மாட்டினர்!!

சீனிப்பாணியை தயாரித்து தேன் என்று மோசடி செய்து விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொதுச் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்குளம் பொதுச்... Read more »

மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின்... Read more »

சர்வதேச கிறிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இடது கை ஆல்-ரவுண்டர் பாகிஸ்தானுக்காக 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். Read more »