பொதுமக்களை புத்துணர்சியூட்டும் உணவுகள்

தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையால், நம்மில் பலர் குளிர்ச்சியான உணவுகளைத் தேட ஆரம்பித்து விட்டனர்.

இவ்வாறு வெப்பநிலை அதிகமாக காணப்படக்கூடிய நாட்களில் நமது முழு உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்ய நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைத் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறான உணவுகள் பற்றி இன்று நாம் பார்க்லாம்.

வெந்தயம்

வெந்தயத்தில் காணப்படும் குளிர்ச்சியான பண்புகள் காரணமாக பல கை வைத்தியங்களில் அவை பயன்படுத்தப்படுகின்றன.

பலர் காலையில் வெந்தய தண்ணீரை உட்கொள்வார்கள் அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, எழுந்தவுடன் அதை உடனடியாக சாப்பிடுவார்கள்.

கொத்தமல்லி

கொத்தமல்லி விதையில் விட்டமின்கள் அதிகம் உள்ளன. அவை உடலில் இருந்து கெட்ட நச்சுகளை வெளியேற்ற உதவுவதோடு செரிமான பிரச்சினைகளையும் போக்குகிறது.

கொத்தமல்லி அதன் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளால் கோடையில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

புதினா

புதினா வெப்ப நாட்களில் உணவில் சேர்க்க வேண்டிய மிகச்சிறந்த உணவாகும்.

இது குளிர்ச்சியை அளிக்கிறது மற்றும் அஜீரணத்திற்கு எதிராக போராட உதவுகிறது.

புதினா உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

சீரகம்

சீரகம் என்பது பல உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் ஒரு மூலப்பொருளாகும்.

வெயில் காலத்தில் பல புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இது உங்கள் உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

ஏலக்காய்

உடல் சூட்டை குறைக்கும் இயற்கை பொருட்களில் ஒன்று.

உடலின் உள் வெப்பநிலையைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

Recommended For You

About the Author: admin