இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் எனவும், விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கோரி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், சிசேரியா மற்றும் ஹைஃபா ஆகிய இடங்களில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
காஸாவில் ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்குமாறும் தற்போதைய அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறும் இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய கொடிகளை அசைத்தும், பணயக்கைதிகளின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும், அவர்களை உயிருடன் வீட்டிற்கு அழைத்து வருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.