கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் அமையப்பெற்றுள்ள ரஷ்யா நகரமான ஓரன்பர்க்கில் நீர்த்தேக்க அணை உடைந்ததையடுத்து 4,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, அணை உடைந்ததையடுத்து ஓரன்பர்க் பகுதியில் 6,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இதன்பின்னர், சுமார் 1100 குழந்தைகள் உட்பட 4500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடர்களில் இதுவும் ஒன்றென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பிராந்தியத்தில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.