நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் மாற்றாந்தாய் கவனிப்பை செயற்படுத்தி வருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ வீரர்களது மாவட்ட மாநாடு மாத்தளையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்த தெரிவித்த சஜித்
“நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் மாற்றாந்தாய் கவனிப்பையே காட்டி வருகிறது. 34000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தலா 30 இலட்சம் ரூபா வழங்கி சேவையில் இருந்து நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
நாட்டில் பல்வேறு நிதிப்பிரச்சினைகள் இருந்தாலும், 30 வருட கால யுத்தத்தை வெற்றியுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு பாடுபட்ட இராணுவ வீரர்களை மறக்க முடியாது.
நாட்டு மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வரும் அரசாங்கம் இராணுவ வீரர்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தவில்லை.
இலவசமாக வழங்கி வைத்த காணிகளுக்கு பணம் அறவிடுவது வெட்கக்கேடான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.