மாற்றமின்றி தொடரும் பணவீக்கம்..!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... Read more »

யாழில். கீரிச்சம்பாவை பதுக்கிய வர்த்தகருக்கு எதிராக வழக்கு தாக்கல்..!

யாழ்ப்பாணத்தில் கீரிச்சம்பா அரிசியினை பதுக்கிய கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து வர்த்தகர்கள் சிலர் பதுக்களில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ் .... Read more »
Ad Widget

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் இன்னமும் தங்கியுள்ளனர்..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை... Read more »

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்..!

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்..! பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க... Read more »

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை முதல் திறப்பு..!

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை முதல் திறப்பு..! சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறப்பதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இந்த வைத்தியசாலையின் சேவைகள் தற்காலிகமாக... Read more »

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு..!

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை, 25,000 ரூபாவாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும... Read more »

சி.பி. ரத்நாயக்க டிசம்பர் 16 வரை விளக்கமறியலில்..!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (02) கைது செய்யப்பட்டார். தற்போது முன்னெடுக்கப்பட்டு... Read more »

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றி..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையின் நெருங்கிய நண்பராக எம்மோடு இணைந்து உயிர்களைக்... Read more »

தற்கொலை செய்துகொள்ள குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் மீட்பு..!

தற்கொலை செய்து கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் தேடி அநுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். தற்போது பிரதேசவாசிகளினதும் உயிர்காக்கும் குழுவினரதும் உதவியுடன் அந்தத் தாயின் உயிரைக் காப்பாற்ற முடிந்துள்ளதுடன், இரண்டு குழந்தைகளையும் தேடும் பணிகள் தொடர்ந்தும்... Read more »

தட்டுவன் கொட்டி கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..!

தட்டுவன் கொட்டி கிராமத்தின் வெள்ள அனர்த்த நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..! கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தட்டுவன் கொட்டி கிராமத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் களவிஜயமொன்றை இன்றைய தினம்(02.12.2025)மேற்கொண்டிருந்தனர்.... Read more »