அழியப்போகும்_தமிழ்த்_தேசியம்

அழியப்போகும்_தமிழ்த்_தேசியம்

பொது எதிரியான JVP (NPP) அலையில்,

தமிழரின் போராட்டங்களும்

தியாகங்களும்,

சொத்தழிவிகளும்

உயிரிழப்புக்களும் மறக்கப்பட்டு,

இளைய தலைமுறையினர் அனுரவிற்கு பின்னால் செல்லும் #மந்தைகள்போல திரியும் இந்நேரத்தில்,

தமிழ்த் தேசியத்தை மீளவும் கட்டக்காக்க வேண்டிய கடமையில் இருக்கும் மிகப்பெரிய கட்சியான தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன், மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை கட்சியை விட்டு துரத்தும் விதமாக, அரசியல் காய்களை நகர்த்துவது மிகவும் அருவருக்கத்தக்கது…

பொது எதிரி ( JVP) இருக்கும்பொழுது, பொதுஎதிரியை குறிவைத்து காய்களை நகர்த்தாமல் உங்கள் உட்கட்சிக் குடுமிபுடிச் சண்டைகளை பொதுவெளியில் சந்திசிரிக்க போடுவது கேவலமானது மட்டுமல்ல அது முட்டாள்தனமானதும்கூட….

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அறவே எதிர்த்த நாங்கள்கூட, தமிழரசு கட்சி தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பி ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றே விரும்புகிறோம்…( TNA ல் சேரும் எண்ணமும் ஒருபோதும் எமக்கோ அல்லது எனக்கோ இல்லை…)

சிறிதரன் என்ற Mass Leader ற்கு எதிராக செயற்படுவதை, அடுத்த மாகாணசபை தேர்தல் வரைக்குமாவது மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒற்றுமையாக பயணிக்குமாறு சிவஞானம் ஐயாவையும் சுமந்திரன் ஐயாவையும் விநயமாக கேட்டுக்கொள்கிறேன்…

இல்லை …

“பலமான கட்சித் தலைமைத்துவம்தான் தேவை… “

“சிறிதரன் செய்தது பிழை …”

என்று உங்கள் சட்டப் பலத்தை, சட்டப்பலம் இல்லாத சிறிதரன் மீது காட்ட முயற்சிப்பதே உங்கள் முடிவானால் அப்படியே செய்து உங்கள் கட்சியையும் அழித்து தமிழ்த் தேசியத்தையும் சிதைத்துத் தொலைந்து போங்கள்…

ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்…

“உங்கள் அழிவிலோ அல்லது தமிழ் தேசியத்தின் அடையாளச் சிதைவிலோ நாங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டோம்…”

இப்படிக்கு

Stanislaus Celestine

Attorney at Law

Recommended For You

About the Author: admin