இலங்கையின் டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. பாதிப்புகள்... Read more »
இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத், தனது நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளியில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இலங்கை... Read more »
நுவரெலியாவில் வெள்ள நீர் உட்புகுந்த விற்பனை நிலையங்கள், களஞ்சியசாலைகள் போன்றவற்றிலுள்ள பெரும்பாலான உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்களை அழிப்பது பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான செயலாகும் என்பதால் நுவரெலியாவில் விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சிய சாலைகளில் உணவுக்கு உகந்ததாக... Read more »
நிவாரணப் பொருட்கள் விவகராம்: விளக்கம் அளிக்குமா பாகிஸ்தான்? இலங்கைக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் முக்கிய இடம் வகிக்கின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் வழங்கிய நிவாரணப்பொருட்கள் காலாவதியாகியதாகக் கூறி சமூக ஊடகங்களில் படங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் தூதுவராலயம் விளக்கமளிக்க... Read more »
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவுகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இலங்கைக்குத் தொடர்ச்சியாகக் கணிசமான சர்வதேச ஆதரவு கிடைத்து வருவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகள் இலங்கை அரசுடன் தமது ஒற்றுமையைத்... Read more »
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின் விநியோகம் ஒருபோதும் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் (CEB) பொது முகாமையாளர் ஷெர்லி குமார உறுதியளித்துள்ளார். கட்டணம் பற்றி கவலை இல்லை: பயனர்கள் மின் கட்டணங்களைச் செலுத்தாத காரணத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பைத்... Read more »
வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதற்காக வெளிநாட்டு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள... Read more »
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... Read more »
யாழ்ப்பாணத்தில் கீரிச்சம்பா அரிசியினை பதுக்கிய கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து வர்த்தகர்கள் சிலர் பதுக்களில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ் .... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை... Read more »

