இலங்கையின் டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 465 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
பாதிப்புகள் குறித்த சமீபத்திய அறிக்கை:
பாதிப்புக்குள்ளானோர்: 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர்
மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: புத்தளம், பதுளை, கண்டி, நுவரெலியா, கொழும்பு
வீட்டுச் சேதங்கள்:
முழுமையாக அழிந்த வீடுகள்: 783
பகுதியளவில் சேதமடைந்த வீடுகள்: 31,417
உயிரிழப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்கள்:
கண்டி: 118
நுவரெலியா: 89
பதுளை: 83
தங்குமிடங்கள்:
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 1,433 பாதுகாப்பு மையங்களில் தற்போது 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல வழி கிடைத்தவுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

