யாழில் நீண்ட நாளாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது!

மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளது.

குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து இன்றைய தினம் (20-10-2022) யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவிருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor