இலங்கை – இந்தோனேசியா இடையே தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய உடன்பாடு!
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான தொழிலாளர் துறை இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஜகார்த்தாவில் புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, இந்தோனேசிய தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் யசியர்லியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இச்சந்திப்பில் தொழிலாளர் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு முறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அதிகரித்து வரும் தொழிலாளர் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு, மனித கடத்தல் மற்றும் குடியேற்ற விதிகளை மீறுதல் போன்ற சவால்களை எதிர்கொள்ளவும், வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நெருக்கமான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்க இணக்கம் காணப்பட்டது.

