2026 உலகக் கிண்ண குரூப் ‘K’ போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
போட்டியின் 6-வது நிமிடத்தில் ஜாவோ கான்செலோவின் கிராஸ் மூலமாக முதல் கோலை அடித்த 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து வரலாற்றில் ஆறு வெவ்வேறு உலகக் கிண்ணத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) கோல் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
ரொனால்டோ ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.
இதன்மூலம், உலகக் கிண்ணப்போட்டிகளில் போர்த்துக்கல்; அணிக்காக அதிக கோல் அடித்த ஜாம்பவான் யுசேபியோவின் (9 கோல்கள்) சாதனையை முறியடித்து, 10 கோல்களுடன் போர்துக்கல்லின் புதிய வரலாற்று நாயகனாக மாறினார்.

