அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும் போது தேசப்பற்றாளர்கள் போன்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும் போது தேசப்பற்றாளர்கள் போன்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

மக்களுக்காக குரல் கொடுப்பதால் அரசாங்கம் பழிவாங்குவதாக ஊடகங்களுக்கு குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் தான் ஏன் சிறை செல்கிறோம் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், வழக்குகள் நெருங்கும் போது கலக்கமடைந்து நாடாளுமன்ற சபை நடுவில் வந்து முரண்பட்டுக்கொள்வதால் ஏதும் மாறப்போவதில்லை. சிறந்த சட்டத்தரணிகளின் உதவியை பெற்று வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

தண்டனை வழங்கலை தாமதப்படுத்தக் கூடாது என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். மக்களின் கோரிக்கையையே ஜனாதிபதி நிறைவேற்றுகிறார். நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்குரிய வசதிகளை வழங்கியுள்ளார்.

இது நீதித்துறை மீதான அழுத்தமல்ல. வழக்குகள் நெருங்கும்போது கலக்கமடைந்து நாடாளுமன்ற சபை நடுவில் வந்து முரண்பட்டுக் கொள்வதால் ஏதும் மாறப்போவதில்லை.

சிறந்த சட்டத்தரணிகளின் உதவியை பெற்று வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Recommended For You

About the Author: admin