ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஊடக பேச்சாளர் அல் ஜசீரா அரபு ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கடல்சார் வணிகப் போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில், கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி சீராகத் தொடர்வதை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகள் அந்த பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முன்னதாக அறிவித்திருந்தது.
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அது ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பைத் தாங்கள் உறுதி செய்யப்போவதாகவும் அமெரிக்கா விடுத்துள்ள இந்த அறிவிப்பு சர்வதேசப் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

