மகனின் உயிரைக் காப்பாற்றி உயிர் நீத்த தாய்!

மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற துயரமான மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது.

கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில், மிரிஸ்ஸ மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய சதுரங்கி என்ற இளம் தாய் உயிரிழந்துள்ளார்.

தாய்மையின் உன்னத தியாகம்

விபத்து இடம்பெற்ற அந்த ஆபத்தான தருணத்தில், தன் உயிரைப் பற்றி சிந்திக்காமல் தனது பிஞ்சு மகனின் உயிரைக் காப்பாற்றவே அவர் போராடியதாக தெரிவிக்கப்படுகிறது.

தண்ணீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்ட போதும், தனது மகனை மோட்டார் சைக்கிளின் மேல் பாதுகாப்பாக நிறுத்தி அவனது உயிரைக் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

பின்னர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனது இறுதி தருணத்திலும் மகனின் பாதுகாப்பையே முதன்மையாகக் கருதிய அந்தத் தாயின் தியாகம் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

ஒரு தாயின் அன்பிற்கு எல்லையே இல்லை” என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளார் சதுரங்கி.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்.

Recommended For You

About the Author: admin