காருக்குள் ஐஸ்கிரீம் சிந்தியதற்காக 6 வயது சிறுமி கொலை

உள்ளத்தையே உலுக்கும் கொடூரம்! காருக்குள் ஐஸ்கிரீம் சிந்தியதற்காக 6 வயது சிறுமி கொ*லை

வெறும் 6 வயதுதான் ஆன வெண்ணிலா என்ற அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் இந்த உலகிலிருந்து பறிக்கப்பட்டதற்கான காரணம், நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அற்பமானது.

காருக்குள் இருந்தபோது தவறுதலாக ஐஸ்கிரீம் இருக்கையில் சிந்தியதற்காக, அவளது தாயின் ஆண் நண்பரான மோகன் என்ற நபர் இந்தக் கொடூரச் செயலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு ஐஸ்கிரீம் வேண்டும் என்று அழுத குழந்தையின் வாய் மற்றும் மூக்கை பலமாகப் பொத்திப் பிடித்தும்,

வயிற்றில் தாக்**கியும் அவளை மரணத்தின் விளிம்பிற்கு தள்ளியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

“அம்மா” என்ற சொல்லுக்கே அவமதிப்பாக மாறிய ஒரு பெண்ணின் நிழலில் அந்தக் குழந்தை வாழ்ந்துள்ளது.

சட்டத்தின் மூலம் நீதி நிலைநாட்ட வேண்டிய ஒரு வழக்கறிஞராக இருந்தும், தனது சொந்த மகளின் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைத் தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தையின் உயிர் பிரிந்த பிறகும், அதை இயல்பான மரணமாகக் காட்ட முயற்சி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தடயவியல் ஆதாரங்களும், உடற்கூறு ஆய்வு அறிக்கையும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.

விவாகரத்துக்குப் பிறகு தாயுடன் வாழ்ந்த மகளின் மரணத்தில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் தெரிவித்த தந்தை பிரவீனின் விடாமுயற்சியே உண்மையை வெளிக்கொண்டு வர உதவியது. குற்றஞ்சாட்டப்பட்ட மோகன் மற்றும் தாய் பிரியங்கா தற்போது காவல்துறையின் பிடியில் உள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்!

இத்தகைய இரக்கமற்ற மனிதர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பதே பயத்தை ஏற்படுகிறது. விளையாடி சிரித்து மகிழ வேண்டிய வயதில், மிகவும் விரும்பிய ஐஸ்கிரீமை காரணமாகக் கொண்டு உயிரிழக்க நேர்ந்த அந்தச் சிறுமி வெண்ணிலாவுக்கு கண்ணீர் அஞ்சலி

Recommended For You

About the Author: admin