ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பறிக்க அமெரிக்கா திட்டம்;
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் தீவிர பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவால் சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான பில்லியன் கணக்கான டாலர் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக வாஷிங்டன் புதிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் அண்மைக்காலமாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இத்தாக்குதல்களினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் கட்டமைப்பு ரீதியான இழப்புகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக, தற்போது அமெரிக்கக் கட்டுப்பாட்டிலுள்ள ஈரானிய அரசாங்கத்தின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்தப் போவதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) அதிரடியாக அறிவித்துள்ளார்.

