ஈரான் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்..

அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்கவானூர்தி வீழ்த்தப்பட்டதற்கான பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள், கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆதாரங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானிய ஊடகங்கள், தெற்கு ஈரானில் உள்ள ஜாஸ்க் (Jask), பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), மற்றும் கெஷ்ம் தீவு (Qeshm Island) பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளன.

அமெரிக்கா–ஈரான் பதற்றத்தின் சமீபத்திய கடும் மோதலாக கருதப்படுகின்றன. சேதத்தின் முழு அளவு மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

🚨 உலங்குவானூர்தியை நாங்கள் தாக்கவில்லை- ஈரான்

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை இலக்குகளை தாங்கள் தாக்கியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று ஹோர்முஸ் நீரிணை அருகே கீழே விழுந்த அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்குவானூர்தியை தாங்கள் திட்டமிட்டு குறிவைத்து தாக்கவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.

🚨 பதிலடி தாக்குதல் – ட்ரம்ப்

அமெரிக்க உலங்குவானூர்தியை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கான பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin