இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் மற்றும் சிரியா தங்கள் வான்பரப்பை மூடின!

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் மற்றும் சிரியா தங்கள் வான்பரப்பை மூடின!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பைத் தற்காலிகமாக மூடுவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்துள்ளது. அதேபோல, சிரியாவும் தனது வான்பரப்பைப் பகுதியளவு மூடியுள்ளது.

 

ஈராக் குடிமை விமானப் போக்குவரத்து ஆணையம் தங்களது வான்பரப்பை 72 மணி நேரத்திற்கு முற்றிலுமாக மூடுவதாக அறிவித்துள்ளது. மறுபுறம், சிரிய நாட்டு ஆணையம் தனது “தெற்கு வான்வழிகளை” (Corridors aériens du sud) 12 மணி நேரத்திற்கு மூடுவதாகவும், தலைநகர் டமாஸ்கஸ் (Damas) சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin