காதலனின் மாஸ்டர் பிளான்!! பிரான்ஸ் வாழ் முல்லைத்தீவு அங்கிளை காதலித்து பிரான்ஸ் சென்று தலைமறைவான வவுனியா சர்மிளா கைது!!
45 வயதான பிரான்ஸ்சில் வாழும் முல்லைத்தீவு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான குடும்பஸ்தர் ராஜன் (பெயர் மாற்றம்) தலையில் மிளகாய் அரைத்து பிரான்ஸ் சென்று காதலனுடன் தலைமறைவாகிய வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட தர்மேந்திரன் சர்மிளா என்ற 25 வயது யுவதி தற்போது பிரான்ஸ் பொலிசாரின் பிடியில் உள்ளதாகத் தெரியவருகின்றது..
குறித்த யுவதிக்கு பிரான்ஸ்சில் காதலன் ஒருவன் இருந்துள்ளான். பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான La Courneuve பகுதியில் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் சர்மிளாவின் காதலன் ஜெயநேஸ் வேலை செய்து வந்துள்ளான். குறித்த வாகனசுத்திகரிப்பு நிலையம் ராஜனால் வாடகைக்கு எடுக்கப்பட்டு செயற்பட்டு வந்துள்ளது. ராஜன் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணம் மனைவியின் தாயின் இளைய சகோதரியுடன் முல்லைத்தீவில் அந்தரங்கத் தொடர்பில் இருந்தமை மனைவியால் கண்டு பிடிக்கப்பட்டு அதன் பின்னரே விவாகரத்து நடந்துள்ளது. ராஜனின் பெண் பலவீனத்தை அறிந்த ஜெயநேஸ் தனது காதலியுடன் கதைத்து பேசி ராஜனை ஏமாற்ற திட்ட போட்டுள்ளார்கள். ஜெயநேஸ் ஓரிரு வருடங்களுக்கு முன்னரே பிரான்ஸ் சென்று அகதியாக பதிவு செய்தவர் என்பதுடன் ராஜன் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவன் எனவும் தெரியவருகின்றது.
ஜெயநேஸ் கொடுத்த ஆலோசனையின் படி ராஜனின் வட்சப் இலக்கத்திற்கு சர்மிளா மிஸ் கோல் கொடுத்து அதன் பின்னர் இருவரும் நட்பாகி திருமணம் வரை சென்றுள்ளது. சர்மிளாவுக்கும் ராஜனுக்கும் கொழும்பில் பதிவுத் திருமணம் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்துள்ளது. அதன் பின்னர் கடந்தமாதம் சர்மிளா பிரான்ஸ் சென்றுள்ளாள். பாரிஸ் Charles de Gaulle Airport இல் மனைவியின் வருகைக்காக ராஜன் காத்திருந்துள்ளார். ஆனால் அங்கு மனைவியைக் காணவில்லை. இதனையடுத்து விமானநிலைய PAF இடம் ராஜன் இலங்கையிலிருந்து வந்த தனது மனைவியைக் காணவில்லை என முறையிட்டுள்ளார். உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த PAF இலங்கையிலிருந்து வந்த சர்மிளாவை இன்னொருவர் கூட்டிச் செல்வதை CCTV மூலம் கண்டு பிடித்ததுடன் பாரிஸ் பகுதியில் வைத்து சர்மிளாவையும் அவனை கூட்டிச் சென்றவனையும் மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சர்மிளாவை ராஜனிடம் வேலை செய்த ஜெயநேஸ் தன்னிடம் வரவழைப்பதற்காக தனது நண்பனை விட்டு காரில் அழைத்துச் சென்றது அம்பலமானது. இதனையடுத்து சர்மிளாவை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ராஜன் பொலிசாரை கேட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசா மோசடிக் குற்றத்தின் கீழ் சர்மிளா தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்மிளா விசா பெறுவதற்காக ராஜனை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார் என விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக சர்மிளாவின் விசா நிராகரிக்கப்படும் என தெரியவருகின்றது.
இதே வேளை தான் ஏற்கனவே விவாகம் செய்தவர் என தனக்கு கூறாது தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக சர்மிளா ராஜன் மீது குற்றச்சாட்டுக்களை பொலிசாரிடம் கூறியுள்ளதாகவும் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னரே ராஜன் திருமணமாகி விவாகரத்தானவர் என்ற தகவல் தனக்கு கிடைத்ததாகவும் சர்மிளா கூறியதுடன் சர்மிளாவுக்காக சட்டத்தரணி ஒருவரையும் சர்மிளாவின் காதலன் நியமித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
சர்மிளா மற்றும் காதலன் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் சர்மிளா தன்னுடன் அந்தரங்கமாக இருந்த புகைப்படங்கள் போன்றவற்றை ராஜன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். இருந்தும் ராஜனின் பெண் பித்து தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளதால் அவற்றை நாம் பிரசுரிக்கவில்லை.

