ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து: ஈரானின் புதிய நிபந்தனைகள் மற்றும் எச்சரிக்கை!
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் இதயமாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஆக்கிரமிப்பு நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் பாகேய், ஈரானிய அதிகாரிகளுடன் முறையான ஒருங்கிணைப்பை மேற்கொண்ட பின்னரே கப்பல்கள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் நீடித்த போரின் போது, அமெரிக்கா ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.
“அவர்கள் நிறுத்தச் சொன்னதால் நாங்கள் நிறுத்தினோம். ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் இந்தப் போரை ஆரம்பித்துள்ளார்கள்,” என அவர் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

