ஈரான் அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: குவைத் அவசர கால எச்சரிக்கை!

ஈரான் அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: குவைத் அவசர கால எச்சரிக்கை!

ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலைய வளாகத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஏவுகணைத் தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய மற்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மார்ச் 24, செவ்வாய்க்கிழமை இரவு 9:08 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதை ஈரானின் அணுசக்தி அமைப்பு (AEOI) உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், அணு உலைக்கு (Reactor) எவ்வித நேரடிப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், கதிர்வீச்சு அளவு வழமை போலவே இருப்பதாகவும் ஈரான் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையகம் (IAEA) தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அணுமின் நிலையப் பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் தனது பணியாளர்களை ரஷ்யாவின் ‘ரோசாடம்’ (Rosatom) நிறுவனம் வெளியேற்றி வருகின்றது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அண்டை நாடான குவைத் தனது நாட்டு மக்களுக்கு அவசர காலப் பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளது.

புஷெர் அணுமின் நிலையம் குவைத்திலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கதிர்வீச்சு ஆபத்து உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் பாரிய சுற்றுச்சூழல் பேரழிவிற்கு வழிவகுக்கும் என சர்வதேச நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin