உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினால் கடும் பதிலடி: ஜப்பானுக்கு ரஷ்யா எச்சரிக்கை!மாஸ்கோ |

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினால் கடும் பதிலடி: ஜப்பானுக்கு ரஷ்யா எச்சரிக்கை!மாஸ்கோ |

உக்ரைனுக்கு ஜப்பான் ஏதேனும் உயிர்ச்சதத்தை ஏற்படுத்தக்கூடிய (Lethal weapons) ஆயுதங்களையோ அல்லது இராணுவ உபகரணங்களையோ வழங்கினால், அது ரஷ்யாவிற்கு எதிரான “பகைமைச் செயலாக” கருதப்படும் என ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் மரியா சகாரோவா (Maria Zakharova) நேற்று (2026 மார்ச் 25) செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

ஜப்பானின் இத்தகைய நடவடிக்கைகள் உக்ரைன் மோதலில் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மேலும் சீர்குலைக்கும் எனவும், இதற்குப் பதிலாக ஜப்பான் மீது கடுமையான பழிவாங்கும் நடவடிக்கைகள் (Harsh retaliatory measures) எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேட்டோ (NATO) ஒத்துழைப்பு: அண்மையில் ஜப்பான் அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை வாங்கி உக்ரைனுக்கு வழங்கும் நேட்டோவின் PURL திட்டத்தில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கு முன்னதாக, 2025 ஏப்ரல் மாதத்திலும் நேட்டோவுடனான ஜப்பானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ரஷ்யா இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது.

டோக்கியோ மற்றும் மாஸ்கோ இடையிலான உறவு ஏற்கனவே மிக மோசமான நிலையில் உள்ள நிலையில், ஜப்பானின் இராணுவ விரிவாக்க முயற்சிகளை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.தற்போது வரை இந்த எச்சரிக்கை குறித்து ஜப்பான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை. உக்ரைன் விவகாரத்தில் ஜப்பான் இதுவரை தற்காப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளையே வழங்கி வந்த நிலையில், இந்த புதிய எச்சரிக்கை ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin