இஸ்ரேலில் 4,697 பேர் படுகாயம்

இஸ்ரேலில் 4,697 பேர் படுகாயம்:

ஈரான், ஹிஸ்புல்லாவுடனான போரின் கோர முகத்தை வெளியிட்டது இஸ்ரேலியச் சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று வரும் பல்பரிமாணப் போரின் உண்மையான மனிதாபிமானப் பாதிப்புகளை இஸ்ரேலியச் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

4,697 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி:

இஸ்ரேலியச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,

 

ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான இந்தப் போர் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, இஸ்ரேல் முழுவதும் மொத்தமாக 4,697 பேர் படுகாயமடைந்து

 

வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மாபெரும் எண்ணிக்கையானது, இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அரண்களைத் தாண்டி எதிரிகளின் ஏவுகணைகளும் ட்ரோன்களும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளமையை உறுதிப்படுத்துகிறது.

 

14 பேரின் நிலைமை கவலைக்கிடம்:

மேலும், இவ்வாறு காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ள போதிலும், 124 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து அவசரச் சிகிச்சைகளைப் பெற்று வருவதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

இவர்களில் 14 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக (serious condition) உள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஈரானின் பாரிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹிஸ்புல்லாவின் தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாகவே இந்தப் பாரிய உயிராபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin