டுபாய் விமான நிலைய சேவைகள் மெல்ல வழமைக்குத் திரும்புகின்றன
டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில் சேவைகள் மெல்ல வழமை நிலைக்குத் திரும்புகின்றன.
விமான நிலையத்தின் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் தீ மூண்டதாகவும் எரிவாயுத் தொட்டி ஒன்று பாதிக்கப்பட்டதாகவும் டுபாய் அதிகாரிகள் கூறினர்.
அதனால் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. விமான நிலையம் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
கடந்த மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கின. அப்போது முதல் பதிலடியாக அண்டை நாடுகளை ஈரான் தாக்குகிறது.
மத்திய கிழக்கில் பெரும்பாலான விமான வழிப் பாதை தொடர்ந்து மூடியிருக்கிறது. இதனால் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்படுகின்றன. அனைத்துலக விமானத்துறையில் இது பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

