டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா குற்றவியல் விசாரணை!

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யா குற்றவியல் விசாரணை!

டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான பாவெல் துரோவ், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, ரஷ்ய அரசு அவர் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

📌 பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியது (Abetting Terrorist Activities) மற்றும் பிரிவினைவாதத் தூண்டுதல்களுக்கு இடமளித்தது என ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது.

குறிப்பாக டெலிகிராம் செயலியானது மேற்கத்திய மற்றும் உக்ரேனிய உளவுத்துறையின் கருவியாகச் செயல்படுவதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் ரஷ்ய ராணுவ வீரர்களின் தகவல்களைச் சேகரிக்கவும், உள்நாட்டில் நாசவேலைகளைத் திட்டமிடவும் இச்செயலி பயன்படுத்தப்படுவதாக கிரெம்ளின் கூறுகிறது.

இந்த விசாரணை “பேச்சு சுதந்திரம் மற்றும் தனிமனித தனியுரிமையை நசுக்கும் முயற்சி” என்றும், “தன் சொந்த மக்களையே கண்டு அஞ்சும் ஒரு அரசின் பரிதாபகரமான காட்சி” என்றும் பாவெல் துரோவ் விமர்சித்துள்ளார்.

🔍 கடந்த 2024-ம் ஆண்டு பிரான்ஸ் அதிகாரிகளாலும் துரோவ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஷ்யா தனது சொந்த நாட்டுச் செயலியான ‘MAX’ எனும் தளத்திற்கு மக்களை மாற்ற முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவே டெலிகிராம் மீது இத்தகைய நெருக்குதல்களைக் கொடுப்பதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Recommended For You

About the Author: admin