வடக்கின் போக்குவரத்து குறைபாடுகளை நீக்க ரூபாய் 4,000 மில்லியன் ஒதுக்கீடு.
வடமாகாணத்தில் நிலவும் பேருந்து தரிப்பிடக் குறைபாடுகளை நீக்கி, பொதுமக்களுக்குச் சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்க அரசாங்கம் ரூபாய் 4,000 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமர இது குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
வடக்கில் தரமான பேருந்து தரிப்பிடங்கள் இல்லாத நிலையை மாற்றி புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வழங்கும் மானியத் திட்டங்களை வடமாகாண மக்கள் முழுமையாகப் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவா் தொிவித்தாா்
போக்குவரத்து முடங்கினால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கும் என்பதால், இதனை ஒரு முன்னுரிமைத் திட்டமாக அரசாங்கம் கருதுகிறது எனத் தொிவித்த அவா் “எமது எதிர்கால சந்ததியினருக்குச் சிறந்ததொரு போக்குவரத்து கட்டமைப்பை விட்டுச் செல்வதே எமது இலக்கு!” எனத் தொிவித்தாா்.

