பயங்கரவாத தடைச் சட்டமும் புதிய சட்ட வரைபும்: வேந்தனின் விமர்சனம்

பயங்கரவாத தடைச் சட்டமும் புதிய சட்ட வரைபும்: வேந்தனின் விமர்சனம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறிக்கொண்டு, அதைவிடவும் கொடூரமான மற்றும் அடக்குமுறை மிகுந்த புதிய சட்டமொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் வாக்குறுதியின்படி PTA-வை நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள போதிலும், அதற்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள மாற்றுச் சட்டம் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகவே PTA-வை நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போதைய சட்டத்தை விடவும் மிக மோசமான, கொடூரமான ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தினால் கடந்த காலங்களில் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். குறிப்பாகப் போராளிகள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இந்தச் சட்டமானது ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது ஏவப்பட்ட ஆயுதமற்ற வன்முறை என அவர் சாடியுள்ளார்

“பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதை விடக் கொடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin