வடக்கில் பேருந்து சாரதிகளின் விதிமீறல்களை இனி சகித்துக்கொள்ள வேண்டாம்! உடனே முறையிடுங்கள்! 

வடக்கில் பேருந்து சாரதிகளின் விதிமீறல்களை இனி சகித்துக்கொள்ள வேண்டாம்! உடனே முறையிடுங்கள்!

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயல்படும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

📍 வவுனியாச் சாலையில் பேருந்தைச் செலுத்திபோது கைப்பேசி பயன்படுத்திய சாரதி ஒருவர், பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்து இனங்காணப்பட்டார். அவருக்கு 3 நாட்கள் கட்டாய ‘மீட்டல் பயிற்சி’ வழங்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

📸 அரசு அல்லது தனியார் பேருந்து சாரதிகள் பின்வரும் விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை நீங்கள் ஒளிப்படம் (Photo) அல்லது காணொலியாக (Video) பதிவு செய்து அனுப்பலாம்:

• 📱 வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல்.

• 🏎️ அதிவேகமாகப் பேருந்தைச் செலுத்துதல்.

• ⚠️ கவனயீனமாக அல்லது அச்சுறுத்தும் வகையில் வாகனம் செலுத்துதல்.

________________________________________

📞 முறைப்பாட்டுக்கான இலக்கம்:

உங்கள் ஆதாரங்களை 0719090900 என்ற எண்ணிற்கு WhatsApp ஊடாக அனுப்பி வையுங்கள்.

“பயணிகளின் பாதுகாப்பே எமது முன்னுரிமை. விதிமீறல்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி துரித நடவடிக்கை எடுக்கப்படும்.”

விழிப்புடன் இருப்போம்! விபத்துக்களைத் தவிர்ப்போம்!

Recommended For You

About the Author: admin