தொல்பொருட்களுக்காக அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

தொல்பொருட்களுக்காக அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

லுனுகல – புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில் உள்ள கும்புகன் ஓயா வனப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களுடன் அகழ்வுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான சந்தேக நபர்கள் லுனுகல, எம்பிலிப்பிட்டிய, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் குறித்து லுனுகல போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin