விரைவில் நானுஓயாவிலிருந்து ரயில் சேவை ஆரம்பம்
நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து அம்பேவெல வழியாக பதுளை வரை ரயில் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக நானுஓயா ரயில்வே நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் மலையக மார்கத்தின் டிட்வாவுக்கு முந்தைய வழக்கமான ரயில் சேவைகளை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
மலையக ரயில் பாதையில் மாத்திரம் 54 இடங்கள் மண்சரிவுகளால் சேதமடைந்தன.
அத்துடன் பாலங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் சமிஞ்சை கட்டமைப்புக்கள் மற்றும் பிரதான கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.
குறிப்பாக நானுஓயா ரயில் நிலையத்திற்கும் ஹட்டன் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளது.
அவற்றை மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளை எதிர்வரும் நாட்களில் துரிதமாக ஆரம்பித்து செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது,
இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளது
நாட்டில் கடந்த வருடம் நிலவிய டிட்வா புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுள்ளன.
தற்போது மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை – அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

