“லண்டன் செல்லத் தடை?” – இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர் கவனத்திற்கு!

“லண்டன் செல்லத் தடை?” – இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர் கவனத்திற்கு!

பிரித்தானியா (Royaume-Uni) தனது குடியேற்றக் கொள்கையில் (Politique d’immigration) மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனால், இரட்டைக் குடியுரிமை (Binationaux) வைத்துள்ள பலர் இங்கிலாந்து எல்லைக்குள் நுழைய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

 

வரும் பெப்ரவரி 25-ம் திகதி முதல் இந்தப் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது என்று பிரித்தானிய உள்துறை அமைச்சகம் தெரிவி த்துள்ளது.

 

இதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குள் சென்று வந்தவர்கள், இனி அப்படிச் செய்ய முடியாது.

 

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் கண்டிப்பாகத் தங்களுடைய செல்லுபடியாகும் பிரிட்டிஷ் கடவுச்சீட்டை (Passeport britannique) எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.

 

அப்படி கடவுச்சீட்டு இல்லை என்றால், “உரிமைச் சான்றிதழ்” (Certificat de droit) என்ற சிறப்பு ஆவணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும்.

 

இந்தச் சான்றிதழ் பெறுவது எளிதான காரியமல்ல. கடவுச்சீட்டு இல்லாதவர்கள், இந்தச் சான்றிதழைப் பெற மிக அதிகமான தொகையை அபராதம் போலச் செலுத்த வேண்டியிருக்கும். இது சாதாரண விசா கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகம்.

 

சமீபத்தில் வெளிநாட்டினருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ETA (மின்னணு பயண அனுமதி) முறையை இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது. அவர்கள் பிரித்தானிய குடிமக்கள் என்பதால், இந்த நடை முறை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

 

“கடைசி நேரத்தில் எல்லையில் (Frontière) காத்துக்கிடக்க வேண்டாம்; உடனடியாக கடவுச்சீட்டு அல்லது உரிமை சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள்,” என்று அரசாங்க இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்தால் விமான நிலையத்தில் யுரோஸ்டர் தொடருந்து நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்.

Recommended For You

About the Author: admin