ஈரான் – அமெரிக்கா அணுசக்தி மோதல்: நிபந்தனைகளை நிராகரித்தது ஈரான்!

மிரட்டலுக்கு பதில் மிரட்டல்!

ஈரான் – அமெரிக்கா அணுசக்தி மோதல்: நிபந்தனைகளை நிராகரித்தது ஈரான்!

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா முன்வைத்த புதிய அணுசக்தி உடன்படிக்கைக்கான நிபந்தனைகளை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

📍 அமெரிக்கா முன்வைத்ததாகக் கூறப்படும் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டும்.

அதன் பிறகு, ஈரான் வெறும் 1.5% என்ற மிகக் குறைந்த அளவில் மட்டுமே யுரேனியத்தை செறிவூட்ட அனுமதிக்கப்படும்.

ஈரான் தற்போது வைத்துள்ள 60% செறிவூட்டப்பட்ட 400 கிலோ கிராம் யுரேனியத்தை சர்வதேசக் கண்காணிப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதற்குக் கைமாறாக அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்காது; மாறாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை மட்டுமே வழங்கும்.

🛑 இந்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. தங்களின் “இறையாண்மை” மற்றும் அணுசக்தி உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அனைத்து பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டால் மட்டுமே 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீர்த்துப்போகச் செய்வது (Dilute) குறித்து ஆலோசிக்கப்படும் என ஈரான் தரப்பு கூறியுள்ளது.

🚢 பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். போர்டு (USS Gerald R. Ford) மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளதால் இப்பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

Recommended For You

About the Author: admin