இனி அமெரிக்காவை நம்பிப் பயனில்லை… ஐரோப்பா

இனி அமெரிக்காவை நம்பிப் பயனில்லை… ஐரோப்பா எழ வேண்டும்!” – ம்யூனிச் மாநாட்டில் முழக்கம்!

ஜெர்மனியின் Bavière (பவேரியா) பகுதியில் உலகத் தலைவர்கள் கூடியிருக்கும் Conférence de Munich (ம்யூனிச் பாதுகாப்பு மாநாடு) தற்போது நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் அதிபர் உட்படப் பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இம்மாநாட்டில், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவுடனான உறவு குறித்து மிக முக்கியமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

Commission européenne (ஐரோப்பிய ஆணையம்) தலைவரான ஊர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) பேசும்போது, ஐரோப்பிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எச்சரித்தார்.

 

“ஐரோப்பா இத்தனை காலமும் தனது பாதுகாப்பிற்காக அமெரிக்காவையே நம்பி இருந்தது. ஆனால், இனி நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் (Passer à la vitesse supérieure). நமது பாதுகாப்பிற்கு நாமே முழுப் பொறுப்பேற்க (Responsabilité) வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். ஒரு வலுவான ஐரோப்பாவால் மட்டுமே Alliance transatlantique (அட்லாண்டிக் கடந்த உறவு) கூட்டமைப்பை வலுப்படுத்த முடியும் என்பது அவர் வாதம்.

 

அமெரிக்காவின் Secrétaire d’État (வெளியுறவுத்துறைச் செயலர்) மார்கோ ரூபியோ (Marco Rubio) பேசும்போது, Nations unies (ஐக்கிய நாடுகள் சபை) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“உலகில் நடக்கும் மோதல்களைத் தீர்ப்பதில் ஐ.நா சபை எந்தப் பங்கும் வகிக்கவில்லை. அது வெறும் பெயரளவிலேயே உள்ளது. அதில் பெரிய மாற்றம் தேவை,” என்று அவர் சாடினார்.

 

கடந்த காலத்தில் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவு குறித்துப் பேசிய ரூபியோ, “நாம் இருவரும் இணைந்து பயணிக்கவே படைக்கப்பட்டவர்கள்,” என்று கூறினார்.

Recommended For You

About the Author: admin