“இனி, காலம் முழுக்க, எங்க கிட்டதான் நீங்க கையேந்தணும்”

“இனி, காலம் முழுக்க, எங்க கிட்டதான் நீங்க கையேந்தணும்”- 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை; கலக்கத்தில் பாகிஸ்தான்..!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த ப*யங்கரவா*தத் தா*க்குதலில் 26 பேர் கொ*ல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானுடனான 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

 

பாகிஸ்தான் அரசு ப*யங்கரவா*திகளுக்கு உதவுவதாக குற்றம் சாட்டிய மத்திய அரசு, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) நிறுத்திவைத்தது. இதனால் இந்தியா தனது நீர் உரிமையை முழுமையாக பயன்படுத்த முடிவு செய்தது.

இதன் ஒரு பகுதியாக, செனாப் நதியில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள சாவல்கோட் (Sawalkot) நீர்மின் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது. இத்திட்டம் ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் அரசால் முன்னெடுக்கப்பட்டது. தற்போது தேசிய நீர்மின் கழகம் (NHPC) இதை 9 ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளது.

திட்டத்தின் மொத்த செலவு 31,380 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். முதல் கட்ட பணிகள் 5,129 கோடி ரூபாய் செலவில் தொடங்க உள்ளன.

ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. செனாப் போன்ற மேற்கு நதிகளில் இந்தியாவுக்குக் குறைந்த அளவிலான பயன்பாட்டு உரிமையே இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா அந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் நிலையம் கட்டும் திட்ட பணிகளை இந்தியா துரிதப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NHPC, இந்தத் திட்டத்திற்காக ₹5,129 கோடி மதிப்பிலான டெண்டரை வெளியிட்டுள்ளது

கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. மார்ச் 24-ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவு தண்ணீர் செல்கிறது. சாவல்கோட் திட்டம் முடியும்போது இந்தியாவுக்கு கூடுதல் நீர் மின்சக்தியும், தண்ணீரும் கிடைக்கும். பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் அளவு குறையும். செனாப் நதியை ஒட்டிய பாகிஸ்தான் நகரங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மின்சார தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NHPC தீவிரமாக பணிகளை தொடங்க உள்ளது.

இந்த அணை உருவானால் பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

நமது நாட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு பொருளாதாரத்தை சீரழித்தார்கள். உடனடியாக பணமதிப்பிழப்பு செய்து பிரதமர் மோடி அதனை முறியடித்தார்.

தீ*விரவா*திகளை வளர்த்து நம் நாட்டிற்குள் ஏவுகிறார்கள்; அதற்கு பதிலடி அவர்களது பொருளாதாரத்தில் கை வைப்பது தான்.

வலிமையான பிரதமர் இருக்கும்போது எல்லாமே சாத்தியம் தான்.

Recommended For You

About the Author: admin