‘கரையோரங்களைப் பாதுகாப்போம்’: மன்னாரில் கண்டல் தாவரங்கள் நடுகை!
மன்னார் நகரின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் கரையோரப் பகுதிகளில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் மன்னார் ரொட்ராக்ட் (Rotaract Club of Mannar) இளைஞர்கள் இன்று (07-02-2026) கண்டல் தாவரங்கள் நடுகை செய்துள்ளனர்.
மன்னார் தீவையும் நிலப்பரப்பையும் இணைக்கும் பிரதான பாலப் பகுதியில், அழியும் நிலையிலுள்ள கரையோரச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த விசேட மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் ரொட்ராக்ட் இளைஞர் கழகம், உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து கடற்கரை யோரங்களைப் பாதுகாப்போம்’ (Protect Our Coasts). என்ற தொனிப்பொருளில் ‘ இதனை ஏற்பாடு செய்திருந்தது.
கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் வாழ் உயிரினங்களின் பெருக்கத்திற்கும் உதவும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்டல் (Mangrove) தாவரங்கள் இப்பகுதியில் நடப்பட்டன.
ரொட்டரி கழகத்தின் (Rotary Club) சிரேஷ்ட உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு இந்த நடுகையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
மன்னார் போன்ற கரையோர மாவட்டங்களில் கண்டல் தாவரங்கள் நடுவது மிக முக்கியமானதாகும். அலைகளின் வேகத்தைக் குறைத்து நிலப்பகுதியைப் பாதுகாக்கும்.
மேலும் மீன்கள் மற்றும் இறால் குஞ்சுகள் வளர்வதற்கு இது சிறந்த புகலிடமாகும் என்பதுடன் புயல் காலங்களில் பலத்த காற்றின் தாக்கத்தைக் குறைக்க உதவும் இயற்கை அரணாகச் செயல்படும்.

