யாழ்ப்பாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு : புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்!

யாழ்ப்பாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு : புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்!

யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சுற்றாடல் காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடித் தீர்மானங்கள், மாவட்டத்தின் தூய்மை மற்றும்

மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது சுற்றாடலை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராகவும், திண்மக்கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும் மாவட்ட செயலகம் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது.

திறந்தவெளிகளில் அல்லது பொது இடங்களில் கழிவுகளை எரியூட்டுவது இனி தடை செய்யப்பட்டுள்ளது. யாராவது கழிவுகளை எரிப்பதைக் கண்டால் உடனடியாக 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம். சுற்றாடல் பொலிஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது கழிவுகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் உள்ளூராட்சி சபையினரால் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகள் மட்டுமே சேகரிக்கப்படும்.

வீதிகளில் பொறுப்பற்ற முறையில் குப்பை வீசுபவர்களைக் கண்டறிய கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்படவுள்ளன.

இதேவேளை ஒலிபெருக்கி கட்டுப்பாடு: அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இடையூறுகளை அந்தந்த பிரதேச செயலாளர்கள் ஊடாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை www.cea.aq.lk என்ற இணையத்தளத்தில் நேரலையாகப் பார்வையிடலாம்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin