யாழ் நாவற்குழிபகுதியில் நோயாளர் காவுவண்டி விபத்து..!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் 05.02.2026 வியாழக்கிழமை அதிகாலைப் பொழுதில் நாயாளர் காவுவண்டி ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற நாயாளர் காவு வண்டி வாகனமே இவ்வாறு ஏ9 வீதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் நோயாளர் காவு வண்டியில் சென்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத போதிலும் அம்புலன்ஸ் வாகனம் கடுமையாக சேதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

